பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி 17 இனிய அழகிய தீவிய தமிழில் இந்நூலை எழுதி வழங்கும் வித்துவான் சண்முகனார் அவர்கள் மேன் மேலும் இத்தகைய நூல்களை எழுதி நம் இனிய தமிழகத்திற்குத் தொண்டாற்றிச் சிறப்பெய்துவாராக! பல்கலைக் கழகம் இங்ஙனம் அண்ணாமலை நகர், அ. சிதம்பரநாதன். 12—12–1947. இதே வீடும் விளக்கும் என்னும் நூலுக்கு, மயிலம் கல்லூரி முன்னாள் முதல்வர் பெரியார் சி. துரைசாமி ஐயர் அவர்கள் வழங்கியுள்ள மதிப்புரையிலிருந்து எனது மொழி நடை பற்றிய பகுதியை இவண் தருகிறேன்: "... ... தூய எளிய இனிய தமிழ் நடையில் நகைச்சுவையோடு எழுதப் பட்ட இந்நூல் எல்லோரும் படித்து இன்புறுதற் குரியது ... ... 3 * மேற்சொல்லியுள்ள மதிப்புரையாளர்கள் இருவருமே, ஒருவர் எழுதியதை மற்றொருவர் அறியாமலேயே, இனிமைதூய்மை - எளிமை - என்னும் பண்புகளை இயற்கையாகக் குறிப்பிட்டிருப்பது, எனது மொழிநடையின் இயல்புக்குத் தக்க சான்றாகும். மேலும் ஒன்று - சின்னசேலம், உதவிப்பதிவாளர் ந. வே. பிள்ளை எனது திருக்குறள் உரைவிளக்க நூல் பற்றி எழுதியதிலிருந்து: புலவர் சுந்தர சண்முகனார் உரையின் இன்பத் தொடக்கமும், அணுவுக்குள் ஆழ்கடலான சொற்களின் எடுத்துக்காட்டும், சிறை பெறா நீர் நடையும், கொல், "ஒ" பொருள் விளக்கங்களும் என் சிந்தையைக் கொள்ளை கொள்கின்றன. ஒவ்வொரு தமிழனும் தவறாது செயற்