பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 -

சுந்தரகாண்டச்18

பாலது, புலவர் உள்ளுவ துள்ளி உரைத்ததனை ஒரு பகுதி கூட விடாது தெள்ளுதலே ... ... " மற்றும் ஒன்று - திருப்பதி டாக்டர் துரை மோகன ரங்கசாமியவர்கள், எனது தொகைநூல் பற்றி எழுதிய திலிருந்து:

,gap}}‘‘ . . . . . . என்ன அழகிய வாதம்! எவ்வளவு கருத்தினின்ம செறிந்த நடை! எத்தகைய வியப்பிற்குரிய சிறந்த உழைப்பு! என்ன மேதைமை என்ன ஆழம்! என்ன பரப்பு: யாரையும் குறித்துச் சுட்டாமல், எவர் மனமும் நோகாமல், எவரையும் சாடாமல், பெருந்தகையோடு கம்பீரமாகத் தாங்கள் ஒரே செய்தியின் பல்வேறு கூறுகளை விளக்கும்போது அடியேன் வியக்கிறேன். அமைதியான - திடமான - தெளிவான - தூய்மையான பக்குவ நிலை தங்கள் நிலை.

தங்களை நாங்கள் பெற்றது எம் பாக்கியம். தேர்ந்த ஆய்வியல் அறிஞராகிய தாங்கள் திருவேங்கடவன் தமிழ்த் துறையைத் தங்கள் அன்பிடமாகக் கொண்டு என்றும் இங்கே வரலாம். திருப்பதி வேங்கடவனைத் தரிசிக்க வருகையில் தவறாமல் ஒரு கடிதம் எழுதுங்கள். எங்களால் இயன்றவற்றைத் தங்க்ள் பணியாட்கள் போலே செய்வேர்ம். தங்கள் அன்புள்ள துரை. மோகனன் 23-8-77.' மொழிநடை பற்றி மேலும் சில வருமாறு:-

எனது தமிழ் அகராதிக் கலை என்னும் நூலுக்குத் தினமணியில் (21-4-1972) வந்த மதிப்புரையிலிருந்து நடை பற்றிய பகுதி:

"gap"... , ... இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக் களஞ்சியம்; தனி மனிதரின் உழைப்புக் களஞ்சியம். இந் நூலில், தமிழ்ப்புலவருக்கும் தமிழ்ப்புரவ்லருக்கும்-பண்டிதருக்கும் பாமர்ருக்கும் பயன்படும் வகையில், எளிமை