பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19சூறாவளி

யாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச் சுவை மிளிரவும் எழுதிய நூல் நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்ட வேண்டும் ... ..."

  எனது 'வள்ளுவர் இல்லம்' என்னும் நூலுக்குத் தின மணியில் (24-9-64) வந்துள்ள மதிப்புரையில் நடை பற்றிய பகுதி:-'
     "குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், விளக்கக் கட்டுரைகள் ஏராளமாக வந்துள்ளன. ஆனால் புலவர் சுந்தர சண்முகனாரின் விளக்கமும் நடையும் அறிவுக்கு விருந்தானதொரு தனி வழியாகும். ஆராய்ச்சித் திறனும் கலையும் ஆதரிப்பாரின்றித் தமிழ்நாட்டில் சாகாமல் இருக்க வேண்டுமானால், இம்மாதிரி நூல்களுக்குத் தமிழர் ஆதரவு அவசியமாகும்".
    எனது "அம்பிகாபதி காதல் காப்பியம்" என்னும் நூலுக்குத் தினமணியில் (30-1-83) வந்துள்ளதில் ஒரு பகுதி:
    " . . . . . . ஆங்காங்கே பழமொழிகளும் குறள்களும் விரைந்து நடையை நயம் செய்கின்ற்ன. மிக எளிய நடை ஆதலால் அனைவரும் சுவைக்கலாம். அகராதிக் கலை எழுதி அழியாப் புகழ்பெற்றுள்ள ஆசிரியர் காதல் காப்பியம் பாடி அப்புகழை மேலும் நீட்டிக்கொண்டுள்ளார்."
   எனது 'இன்ப வாழ்வு' என்னும் நூலுக்கு The Hindu, என்னும் நாளேட்டில் (29-9-1965) வந்துள்ள மதிப்புரையில் நடை (Style) பற்றியுள்ள் பகுதி:_
 “The style of the work is direct and appealing. The author deserves praise on his successful treatment of the subject.”