பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

இவ்வாறாக என் மற்றைய நூல்கள், எதன் கையிலோ அகப்பட்ட பூமாலை போல் ஆகாமல், அன்புடன் அண்ந்து அழகு செய்வோரின் கைகளில் அகப்பட்ட பூமாலைகளாகத் திகழ்வது எனது நற்பேறே . சிறப்புக் கருத்தமைப்பு:

'சுந்தரகாண்டச் சுரங்கம்'என்னும் எனது இந்த நூலிலும் புதிய நல்ல சொந்தக் கருத்துகளையும் புதிய அணுகு முறை விளக்கங்களையும் காணலாம். அவற்றுள் சிலவற்றைப் பக்கம் வாரியாகக் கீழே தருகிறேன்:-

9.10.11- இயற்கைக் கற்பனை-செயற்கைக் கற்பனை விளக்கம். 16-மந்திரமலை-அனுமன் ஆற்றல். 18-வெண்மை நீங்கிய புகழ்-24 பளிங்குத்தரை - துரியோதனன். 26-37புராணக்கதைக் குறிப்புகட்கு விளக்கம் தருதல். 26மூவகை வள்ளல்கள். 29-கருவைத்தல்-சிறுபாணாற்றுப் படை. 32-பொற்கணன், 37-அத்வைதம்-சைவ சித்தாந்தம், 38,39, 40 தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலம்-திவாகர நிகண்டு. 40-வீணை-யாழ், 41,42-ஞாயிறு தோற்றம், மறைவு: கீழ்க்கடல்-மேல் கடல், உதயகிரி அத்தகிரி 43-தமிழிசை நூல்கள். 44-பட்டி மண்டபம்-பல நூல் மேற் கோள்கள். 44-மனவேகம். 44,45-அரண்கள். 45-பறைகின்றாள்-பறயுக-மலையாள வழக்கு. 47-கன்னல் நாழிகை. 47-குகனுக்குச் சீதை கொழுந்தி. 48,49,50-இராவணன் ஆரியனா? 50-கம்பரின் வடமொழியாக்கம். 51-வெள்ளம். 51,52- உயிர்ப்பொறை. 52-சித்தர். 52,53-உறையிடல் என் பத்ன் அரிய விளக்கம். 54-மாதம்-திங்கள், 55-ஞாயிறு கோளின் வேந்தன்-விளக்கம், 56,57-திங்கள் உடுவின் கோமான்-விளக்கம், 58,59 ஆம்பல் பகைவன்-விளக்கம். 59,60-தாலி வாங்குதல், 61,62,63-கொள்ளும் முன்பே கொடுத்தல்-விளக்கம். 65-குழந்தை வெண்மதி. 66. இராப்