பக்கம்:சுமைதாங்கி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே

வான்மீகி காளிதாசன் வியாசன் போன்ருர்

வளமாக வடமொழியில் விளைத்த நூல்கள் மேன்மையுடன் உலகமுற்றுங் கட்டி யாண்ட

மேனுட்டின் ஆங்கிலேய மொழியின் நூல்கள் ஆன்மீகம் உலகவியல் அனைத்தும் ஈந்த

அன்னேமொழி படைத்துள்ள அறிவு நூல்கள் வான்முட்டப் புகழெட்ட ஆய்ந்து கற்ற

மறையாத மறைமலைக்கு கிகரும் உண்டோ?

மும்மொழியில் கரைகடந்து முற்று ணர்ந்த

முழுஞானி எதிர்ப்பிடையே வெற்றி கண்டார். தம்மொழியில் தனித்தெழுத இயலா தென்ற

தருக்கழித்துத், தறுகளுளர் தந்த நூல்கள் அம்மவோ எத் துணையினிமை, ஆய்வில் நுண்மை!

அன்றிருந்த இருள்போக்கி, மருளும் நீக்கிச், செம்மையுறத் தனித்தமிழ்க்கோர் இயக்கம் தோன்றச் சிறப்புடனே வித்திட்டார்; வளர்த்தோம் இன்று!

அக்காலம் முதன்முதலாய் கம்மேல் வீழ்ந்த

- ஆட்சிமொழி இந்தியெனும் வலையை நீக்கத்

தக்காராய்த் தமிழ்மேலார் இவரைத் தேர்ந்தார்.

தலைஉயர்த்தித் தாம்முழங்கிப் போரில் துள்ளி

"எக்காலும் தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆளும்;

ஏமாற மாட்டோ’மென் றெடுத்து ரைத்தார்.

முக்காலம் உணர்ந்த அந்த நாகை ஈன்ற - மூதடிகள் மறைமலையார் வழியில் செல்வோம்!

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/118&oldid=692195" இலிருந்து மீள்விக்கப்பட்டது