பக்கம்:சுமைதாங்கி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ [

ஆறுமுகம் பன்னிருகை இருகால் கொண்டோன்

ஆண்டவனும், மதிக்கின்றீர், வணங்கு கின்றீர்! ஆறுகாலின் சீருயிராம் என்னைக் கண்டால்

அடியோடு வெறுக்கின்றீர்! ஏனே ஐயா? ஏறுமுகம் இறங்குமுகம் எதில்தான் இல்லை?

எனக்கென்றும் அதிலெல்லாம் உடன்பா டுண்டு; மாறுபாடு கிடையாது; மனித ரைப்போல் -

மந்திமனம் வண்டுமனம் எனக்கு வேண்டாம்.

உயிரெழுத்து வரிசையிலே நான்காய் கிற்பேன்! உமக்கேனே என்பெயரை உச்சரித்தால் தயிரின்றிச் சாப்பிட்ட சைவன் போலத்

தகதகவென் றெரிகிறது. வயிற்றி லெல்லாம்? அயலெழுத்தோ குறுகியதாம் அண்டை வீட்டார்

அயராது பிறன்மனையைக் காய்தல் போலே! பயிலாது துயின்றிருப்போர் விழிப்பார்; என்னைப் பளிச்சென்று பல்தெரிய விளக்கம் செய்வார்!

இரப்பதுதான் தொழிலென்று முடிவு கட்டி

இவ்வுலகில் வாழ்வதற்கே உரிமை பெற்ருேர், சுரப்பதெல்லாம் அன்பென்னும் கருத்தில் எங்கும்

சுற்றிய8லந் தெனேக்கூறிச் சொப்ப லாலே கிரப்பிடுவார் நீர்கொண்டு தம்வயிற்றை;

கித்தகித்தம் செத்தெழுவார்; இழிவு கானர்! பரப்பளவில் மிக்கஇந்த காட்டில் ஈகைப்

பண்பெல்லாம் பண்டைநாள் கதையாயிற்ரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/14&oldid=692091" இலிருந்து மீள்விக்கப்பட்டது