பக்கம்:சுமைதாங்கி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படி

படிபடியென் றேதலையில் அடித்துக் கொண்டார்; பள்ளிவிட்டுக் கல்லூரிப் படிமிதித்தேன்! கொடிபிடியென் gອີກເທົ__ri அண்ணல் காந்தி;

குடந்தையிலே போராட்டக் களம்ப டிந்தேன்! தடியடியும் பிரம்படியும் வெள்ளை ஆட்சி

தரும்படிதான் வரும்படிகள் எல்லாம் அன்று: படியரிசி எப்படியோ நான்க ணுவாய்ப் -

பாடிவிற்ற காலம்மறு படிவா ராதோ?

செப்படிவித் தைபடித்தார் யாரும் உண்டோ?

சிதைந்தலையும் கருமேகத் திரளைக் கூட்டி அப்படியே பிழிந்தெடுத்து மழையாய் மாற்றி

ஆறுகுளம் ஏரிகின றெல்லாம் நீராய்க் கொப்பளிக்கும் படிநிறைக்க மார்க்கம் காண்போம்! குவித்திருந்த தானியங்கள் மாகி லங்கள் இப்படியே கேட்டபடித் தந்து வந்தோம்;

இன்றேங்கும் படியானுேம் வறட்சி யாலே!

'ஏற்றிவிடும் ஏணிக்குப் படிகள் உண்டா?' ஏறியபின் இப்படியும் சிலபேர் கேட்பர்! போற்றியவர் குழறுபடிக் கொள்கை யாலே

புளுகுகின்ற படியாகிப் புழுதி வாரித் துாற்றிடுவார் பெரும்படியாய் மாடி மீதில்

தூக்கிவிடும் மின்தூக்கி பழுதாய்ப் போல்ை மாற்றுவழி சுழற்படிதான் அன்றே என்றும்

மறவாத படியிருப்போம் படிக்கட் டைத்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/20&oldid=692097" இலிருந்து மீள்விக்கப்பட்டது