பக்கம்:சுமைதாங்கி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏணி-தோணி

ஏணி :

ஆற்றுவெள்ளம் விரைந்தோடும்; இறங்கி நீந்த

அறியாதார் உனைத்தானே நாடு கின்ருர்! ஏற்றுகின்ருய், இக்கரையில் உள்ளோர் மீதில்

எத்தனையோ அக்கறையாய் அக்க ரைக்கே மாற்றுகின்ருய்; மகிழ்வோடு காத்தி ருந்து

மறுபடியும் திரும்புவோரை அழைத்து மீள்வாய். போற்றுகின்றர் உன்பாடு கொண்டாட் டந்தான் - புகழ்ச்சியினல் தண்ணிர்போல் குளிர்ந்து போவாய்!

தோணி :

ஒப்புரவாய் ஏறிடுவோர் ஒரம் நின்றல்

உடனடியாய்ச் சமன்செய்ய இயலா வண்ணம் குப்புறநான் கவிழ்ந்திட்டால் என்ன நேரும்?

குடிகேடி என்றென்னைச் சபிப்பார் அன்ருே! எப்போதும் நீர்மேலே மிதப்ப தாலே

ஏற்கனவே குளிர்ந்துள்ளேன்; நீயும் என்னைத் தப்பாக நினைக்கின்ருய்; ஒன்று கேட்பேன்...

தரைமீதில் ஒர்கணம்கான் போதல் ஆமா?

ஏணி :

என்றேனும் நீதரையில் செல்ல நேர்ந்தால்

ஏன் கவலை? வண்டியிலே ஏறிக் கொள்வாய்! சென்றதற்கு நன்றியாக நீரைத் தாண்ட

சிறுஉதவி, வண்டியை ஏற்றிச் செல்வாய்!

- 17 சு.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/26&oldid=692103" இலிருந்து மீள்விக்கப்பட்டது