பக்கம்:சுமைதாங்கி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

விரைவாக முடித்துவிட்டுக் குடமுழுக்கு -

விழாவெல்லாம் விமரிசையாய் நடத்த வேண்டும். அரைகுறையாய் விட்டிருக்கும் அலுவல் யாவும்

அடுத்தமாதம் தீர்த்தால்தான் வசதி யாகும்!” உரையிதுதான்; ஊராரின் கருத்தைக் கேட்க

உட்கார்ந்தார்; பட்டினத்தில் கெட்டு மீண்ட திரையுலகத் துரையொருவன் எழுந்து கின்ருன்:

ாதிகைக்காதீர்; யோசனைகள் நிறைய உண்டு

குடமுழுக்கு விழாவுக்குத் தலைமை ஏற்கக்

கூப்பிட்டால் ஓரமைச்சர் வருவார்; பின்னர் படவுலகின் பிரமுகர்கள், எழுத்தா ளர்கள்,

பாங்கான தொழில்மன்னர், வணிக வேந்தர், இடமளித்தால் வரகிற்கும் இசைவா ணர்கள்,

இவ்வூரே தாங்காமல் பக்தர் வெள்ளம், கடமையாற்றும் அலுவலர்கள், காவ லர்கள்,

கண்காட்சி-பிறகென்ன; வெற்றி தானே?"

ஊராரின் முப்பத்தி ரண்டு பற்கள்

ஒளிசிந்த வாய்பிளந்து வியந்திருந்தார்! சீராக இவையனைத்தும் கேட்டு நின்ற

சிறுபையன் முன்வந்து சரிதான் எல்லாம். யாரார்இங் கெவ்வளவு பணம்கொ டுப்பீர்?

இதுதெரிந்தால் கோபுரத்தை முதலில் கட்டித், தாராளமாகவிழா எடுப்போம்!” என்ருன்;

தலைகுனிந்த பட்டினத்தான் பேச்சே காணுேம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/79&oldid=692156" இலிருந்து மீள்விக்கப்பட்டது