பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடேய்யப்பா. குருமலை சமுசாரிகள் அப்படி கம்மஞ்சோத் தோட என்னத்தைச் சேத்து திங்கான்னே தெரியலை.... என்று திகைப்பு. அசலூர்க்காரன் அசந்து போயிட்டான். இருபது யானைகள் வரீசையாக நின்ற தோற்றத்தில் குருமலை படுத்துக் கிடக்கிறது. கிழக்காமல் நீட்டிக் கிடக்கிறது. காட்டு மரங்கள் அப்படி அரளிப்பு. மேகத்தை கொண்டுவரத் தெம்பில்லாமல் போன குருமலை நரி ஒடுகிறது மலையில். ரொம்ப நாளாக மலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது குருமலை, சமுசாரி ஓயாமல் மண்ணைக் கிண்டி களிமண்ணை அறுத்து கன்வுக் கோட்டைகளைக் கட்டி இடித்துப் போட்டுக் கொண்டிருக்கிறான். ஒன்னுக்கும் அடைபடாத பொந்து கள். மண்ணைவச்சு அடைச்சாலும் இன்னொருபக்கம் பொந்து புடுங்குது. ஒட்டைகளை அடைக்க முடியலை. குருமலையில் ஒடும் நரிகள் வாலைத்துக்கித் தூக்கி ஊளையிட்டு சிரிக்கிறது. தந்திரகார நரிகள். மகசூலைக் கெடுக்கும் நரிகள். கடலைத் தோட்டத்துக்குள் குழி பறிக்கின்றன. அவுட் வெடிகள் இல்லாமல் நரிகள் சொன்ன படிக்கு வராது. பட்டத்துப்பூமி. பட்டம் பிந்தினால் மகசூலைப் பார்க்க முடியாது. ஆவணி புரட்டாசியில் குப்பை சிதறி உழுதாகணும். நம்ம ஊர் காடுகளில் அரு கெடுப்பு நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாய் ஆம்பளைகள். காட்டில் தலை தெறிக்க வெயில் போடுகிறது. நம்ம ஊர் ஆட்கள் ஆழிகள் மாதிரி பெரிய பெரிய லகுடுகள். கடும் மொரடுகள்... இந்த ஆட்கள் உசுரைக் கொடுக்க வேண்டியதிருக்கு. - வானத்தில் மின்னல் வெட்டக் காணோம். பெரிய்ய அபாந்திர மாக இருக்கு. மழை பேயிறமாதிரி தெரியலை. காலையில் அடுக்கடுக்காய் மேகங்கள். கோபுரம் கட்டிவிட்ட மாதிரி உயரம். அவ்வளவு உயரம். கொட்டிவிடுவதுபோல் தோன்றியது. மத்தியானம் வரைக்கும் காற்று உளறியது. ஒன்னுக்குமேல் ஒன்னு அமுக்குற மாதிரி இருக்கு மேகங்கள். நம்ம பெருசுகள் சீராட்டி வளர்த்த மேகங்கள் கருக் கூடுகிறது. மும்முரம் தடபுடல். மேலெ கெடந்தா மேகம்.... கீழ கெடந்தா தண்ணி... நம்ம உயிர் தான மேகம்....' என்று சாமிநாயக்கர் சொன்னார். சாவன்னர் பழுத்த பழம். சமுசாரித்தனத்தில் கூடுன கை. மேகங்களை உற்று உற்று செம்பட்டை பாஞ்ச கண்கள். ஆலமரத்துப் பச்சை இலைக் கூட்டம் HG

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/11&oldid=838995" இலிருந்து மீள்விக்கப்பட்டது