பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலிப்பாயா நீ...? எனது குருதி இசைத்தது: 'ஆம் # 3 ஒரு போதும் பிரிந்திருக்க முடியாத நமது கைகள் தொட்டன; பூட்டிக்கொண்டன. உடனே பரிச்சயமான இனிய தோட்டத்தைவிட்டு உலகத்தின் படைப்பை நோக்கி ஆதாமை ஏவாள் வழிநடத்தியது போல உன்னை நான் அழைத்துப் போவதை உணர்ந்தேன். நீயும் கூட அதை உணர்ந்தாய்; மகிழ்ந்தாய். எதைச் செய்யவும் துணிந்தோம். செய்தோம். வைகறைக் கீதத்தில் மீண்டும் பிறந்திட விரும்பினோம் அந்திப்பொழுதின் மெல்லிசை வேளையில் கொஞ்சம் செத்துப் போகவும் ஒப்பினோம். - நம்மிடம் அதிகமாக இருக்கும் எதையும் - அதை, மீண்டும் நிரப்பிவிடுவோம் என்று அறிந்து கொண்டு ஊதாரித்தனமாக செலவிடத் துணிந்தோம். ஆழ்ந்த இரவு நம்மை இணையாகக் கண்டது தலையணையில். ஆனால் காதல் என்பது ஒரு விழா. நாட்களின் குறிப்பேடு அல்ல. காலம் தாட்சண்யமற்றது. இறுதியில், அது நெருப்புப் போலும் தாபத்தைத் தோற்கடித்து விடுகிறது. வாழ்க்கை இழுத்து மூடப்பட்டு நாம் தூசிகளாகி & விடுகிறபோது அங்கே, ஏதேனும் இருக்குமா நமக்கு? சொர்க்கம் காத்திருக்குமா நமக்கு? நிஜமாக நான் அக்கறைப்படவில்லை மனித வாழ்வு முழுவதும் நான் உன்னோடு வருவேன் அது போதுமானது. ஆகாசத்திலிருந்து சத்தியங்கள் 123