பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இதுவே முதல்முறை. எனது ஆத்மா ஊமையாய்க் கதறுகிறது. 'நான் காத்திருப்பதற்காக நீ ஒருவன் இருப்பாயென்று அறியாமல் போனேனே!" எனது மெளன அழுகையைச் செவியுற்றது போல நீ முத்தமிடுகிறாய்: என்னால் திருப்பித்தர முடியவில்லை. நான் அறிந்து செய்யாத ஒரு குற்றத்திற்காக மன்னிப்பு இறைஞ்சுகிறேன். அகலக் குறைவான உனது படுக்கையில் விலகி, அமர்ந்து சொன்னாய்: 'ஒரு மணமகளுக்கு இது மிகச் சிறியது இதை மாற்றிவிடப் பார்க்கிறேன் நாளைக்கு" என் இதயம் தொண்டைக்குழிக்குத் தாவி பின், திரும்ப வீழ்ந்தது. 'மணமகளா.... ) புதிய படுக்கையா?...' - நான் கனம் ஆனேன் k என் முகத்தின் ஆவலை வாசித்தாய் நீ... உன் விழிகளில் வலி நிரம்புவது கண்டேன் எனக்கோ கண்ணிர் வெள்ளம். ஓ! உன்னைக் குறைவாகக் காதலிக்க இயலுமானால் உன்னை அதிகம் மகிழ்விக்க வேறு, ஒருவழியைக் காண்பேன் எனக்கு வேறு வாய்ப்பு இல்லை. நீயே எனது உணவு எனது பானகம் எனது பூமி எனது வானம் ஆதலால், எனது ஏழைவிழிகள் சிவப்பாகப் போகவிட்டேன் அழுதேன் Í f) Fjðfl f)G5 GMT ஆம் மணமகள்தான் பின் எனக்கு வேறென்ன நீ... ? துயரத்தால், . அழுதுதீர்த்தேன், வீழ்ந்தேன், 128