பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"காதலில் தோற்றவள் நான் புனிதத்தை இழந்தவள் நான்....' மீண்டும் ஒரு மணமகள் ஆக முடியாது. எனது கண்ணிரை உலர்த்தி எனது கூந்தலை அமர்த்தி வார்த்தையற்ற பணிவிடையால் காதல் பேசி உன் கை வருடியபோது முன் ஒரு போதும் அத்தகைய மென்மையை அறிந்ததில்லை நான். உன்னைப் பார்த்தேன் நீ புன்னகைக்கக் கண்டேன் 'நாளை, நான் ஒரு படுக்கையை வாங்கி விடுவேன்' இந்த ஆறுவார்த்தைகள் தான் நீ சொன்னது எல்லாம். காதலுக்குப் பல முகங்கள் நகரங்களின் தெருக்களில் நடமாடுகிற ஏழைகள் அல்லது வான மண்டலத்திற்கு ஒளியூட்டுகிற தூசி மணிகள் எத்தனையோ அத்தனை நிதானமாய், அவற்றுள்ளே நோக்கினால் உனது முகத்தையே காணலாம் நீ. எனது கூந்தலுக்குள் நீ முணுமுணுப்பது கேட்கிறேன். 'உனது தேன் கண்களுக்கு வெதுவெதுப்பூட்டுகிற நிஜத்தங்கமே - மணக்கும் இந்தப் பட்டுக் கற்றையிலும் பூசப்பட்டிருக்கிறது" விழிகளை மூடுகிறேன் நீலநரம்பு இமை ஒவ்வொன்றையும் நீ முத்தமிடுகிறாய். என்னையே நான் நன்றாகக் காதலிக்குமாறு செய்கிறாய் நீ உன்னைக் காதலிக்கும் பொருட்டு. 'சிறகுத் தூண்கள் உனது தோள்கள் நிச்சயமாக வேறெதுவும் தண்ணிர் போலும் இவ்வளவு மழமழப்பானதாக 129