பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


துடி துடிக்கிது, கெங்கம்மாளின் முனங்கலுடன், இப்பதிண்டு முழுங்குன மாதிரி சஞ்சலம். சாமிநாயக்கர் நட்சத்திரங்களைப் பார்த்தார். குருமலைக்கு கிட்டத்தில் நட்சத்திரங்கள் சரிந்து கிடக்கின்றன. * இழுத்து மூச்சுவிட்டுக் கொண்டு மேலில் அழுக்குத்துண்டை போர்த்திக் கொண்டு குடைக் கம்போடு நடந்தார். சக்கிலியக் குடிக்குத் தெற்கில் வளைந்து நெளிந்து ஒடும் காட்டுப்பாதையில் சாவன்னாவின் கைத்தடி தள்ளாடுகிறது. குருமலையில் இருக்கும் இருபது யானைகள் இன்னும் அப்படியே அசையாமல் அபாந்திரத்தைப் பார்த்தபடி ஆழ்ந்து கிடக்கின்றன. தெற்கில் சரிந்த நட்சத்திரங்களை உற்றுப் பார்த்தார். நெஞ்சுத் தடத்து நரைத்த முடிகள் புல்லரித்தன. கண்களின் ஏக்கம் உரத்த ஒளியுடன் காடுகளைப் பாத்து முட்டுகிறது. மனசு லொங்குது. மூசு மூசென்று நெஞ்சுத்தடம் இளைத்து நடுங்குகிறது. ஆள் அருவம் கேட்ட ஆக்காண்டிப் பட்சி உசார் உசார் குரல் கொடுத்து மறைகிறது. ஆக்காண்டிகள் தரையில் பம்மும் சத்தம். கட்டையில் போன கெங்கம்மா மனசுமாதிரி நட்சத்திரம் சிதறி அடிக்கும் வெளிச்சத்தில் சாவன்னா கம்பூணியபடி நின்று கொண்டிருக்கிறார். 'கெழட்டு எளவே... உனக்கு ஆரு இருக்கா... நான் போயிரப் போரேன்... நான் போயிரப் போரேன் உனக்கு யாருமில்லையே. உனக்கு யாரு கஞ்சி ஊத்துவா... உனக்கு நாதியிருக்கா. என்று கெங்கம்மா ஒப்பாரி வச்சு அழுத சாமத்தில் இதே நட்சத்திரங்கள் பசுவின் சாந்தத்துடன் சாவன்னாவைப் பார்த்துக் கொண்டிருந்தன. கெங்கம்மாவின் ஒப்பாரி சன்னமாய் நீட்டி ஒலிக்க, ‘ஏமி கெங்கம்மா... ஏமி கெங்கம்மா... சிறுபிள்ளைமாதிரி... நீபோயிட்டா... வார்த்தைகள் விக்கி அழுதன. கை நடுங்க நடுங்க கெங்கம்மாளைத் தொட்டு துப்பட்டியால் போர்த்தி உறங்க வைத்தது. சாவன்னா ஏங்கிய மூச்சுடன் கெங்கம்மா... என்றார். நட்சத்திரங்கள் அருகில் கைக்கு எட்டும் தூரத்தில் எட்டிப்பிடித்து விடலாம் போல அசைகின்றன. - தனிமையும் சஞ்சவமும் கருக்கிருட்டாய் மங்கி மங்கி சரிந்து செல்லும் நொண்டிப்பாதையில் கைத்தடியுடன் நடந்து கொண்டிருக்கிறார் சாமிநாயக்கர். 31