பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இறங்கி விடுவார். "ப்ரேக்ஃபாஸ்ட் என்ன சாப்பிட்டீக? காலையிலேயே நிறைய மட்டன் சாப்பிட்டீயளா?' என்பார். இவன் காலம்பற வழக்கமாய் பளையது சாப்பிடுகிற ஆளாயிருப்பான். டாக்டரிடம் விட்டுக் கொடுக்காமல் தோசை சாப்பிட்டதாகப் புளுகுவான். ஒரு அந்தஸ்துக் கொடுத்து டாக்டர் பேசிவரும் தோரணையில் சீக்காளியே தன்னை ஒரு வசதிக்காரனாக நினைக்க வைத்து விடுவார். பத்து ரூபாயாவது கறக்க வேண்டுமே. படித்த பள்ளிக்கூடம் ஞாபகத்திற்கு வந்தது. சிகப்பும் வெள்ளையு மாய்ப் பள்ளிக்கூட வாசலுக்கு மேல் பூத்து மயக்கும். அவற்றிற்கு ஊடே ஈரப்பசையோடு நீட்ட நீட்டமாய் மங்கிய நிறத்தில் கொத்து களாய் வேறு பூத்துக் கிடக்கும். வெயிலுக்கு வதங்கி வரும் வாசம் ஒரு விதம். எது வந்தாலும் வகுப்பில் போய் உட்கார்ந்தவுடன்துக்கம் வரும். சரித்திர வாத்தியார் ராம சுப்பிரமணியன் ஒரு நாள் தூங்கி வழிந்த பையன்களைப் பார்த்துச் சொன்னார். 'தூக்கம் ஒரு பெரிய விசயம் டா. படுத்ததும் தூங்குறானே கவலையில்லாம அவன் கடவுளைப் போல, இல்லாட்டி முட்டாளைப் போல. சிக்கந்தர்ங்கிற பயல் திருப்பிக் கேட்டான். 'அப்ப நாங்கள்ளாம் முட்டாள்களாக்கும்' தூங்குவதில் எத்தனையோ வகை. பச்சைப்புள்ளை தூக்கம், சின்னப் புள்ளை தூக்கம், வாலிபப் புள்ள தூக்கம், நடு வயசுத் தூக்கம், கெழட்டுத் தூக்கம் என்று ஒவ்வொரு வகையையும் "வெவரிச்சுச் சொல்வார் மணி மாமா. சொப்பனம் இல்லாமல் தூக்கமே இல்லை என்று ஒரு விஞ்ஞானப் புத்தகத்தில் படித்தது ஞாபகம் வந்தது. இப்போ தெல்லாம் தூக்கம் கொஞ்சமாகி சொப்பனங்கள் ஜாஸ்தியாகி விட்டன. கொசமுசவென்று சொப்பனங்கள். தலை இல்லாமல் உருவம் வருகிறது. வால் முளைத்துப் பெண் வருகிறாள். நேரில் நடப்பது போல் அப்படி அப்படியே சொப்பனங்கள் வேறு. பேலன்ஸ் ஷீட்டில் ஒரு நாள் 529-ரூபாய் 15 பைசா டேலியாக வில்லை. வீட்டிற்குக் கொண்டு வந்து ராத்திரி பத்து மணி வரை பார்த்து விட்டுப் படுத்தான். விடிய விடிய 529-ரூபாய் 15 பைசாவை ஒவ்வொரு ரிஜிஸ்தரிலும் துண்டுக் காகிதங்களிலும் டிராயரிலும் தூக்கம் பூராவிலும் தேடிக் கொண்டே இருந்தது விடியற்காலை எழுந்ததும் தெரிந்தது. 71