பக்கம்:சுயம்வரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

113



“கண்ணராவிக் காட்சியாவது அதுதான் இந்தக் காலத்து வாலிபர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சி'”

“'ஊரில் இருக்கும் வாலிபர்களுக்கெல்லாம் இவர்கள் ஏன் கண்கொள்ளாக் காட்சியாக இருக்க வேண்டுமாம்? வீட்டில் இருக்கும் தங்கள் கணவன்மாருக்கு மட்டும் இவர்கள்கண்கொள்ளாக் காட்சியாக இருந்தால் போதாதா?”


"அது எப்படிப் போதும்? இந்த உலகத்து வாலிபர்களை யெல்லாம் தங்கள் காலடியில் வந்து விழச் செய்யவேண்டும் என்பதல்லவா இந்தக் காலத்துக் கிளியோபாத்ராக்க"ளின் லட்சியம்)"

“எதற்கு?"

"யாருக்குத் தெரியும்?" '

“அவர்களுக்காவது தெரியுமா அது?” '

“தெரியாதென்றுதான் நினைக்கிறேன்"”

"வேடிக்கையாயிருக்கிறதே, நீங்கள் சொல்வது அதற்காக அவர்கள் கணவன்மார் அவர்களைக் கண்டிப்பதில்லையா?” '

“இல்லை; தங்கள் மனைவிமாரைத் தாங்கள் பார்த்து மகிழ்வதை விட, பிறர் பார்த்து மகிழ்வதைத்தான் அவர்களும் இப்போது பெறற்கரிய பெருமையாக நினைக்கிறார்கள்! ” '“கடவுளே, கடவுளே! இதெல்லாம் அவர்களை எங்கே கொண்டு போய் விடுமோ?”' என்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் அவள்.

“வேறு எங்கே கொண்டு போய் விடப் போகிறது? விட்டால் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டு போய்த் தான் விடும்!” என்றான் அவன்.

அவள் சிரித்தாள்; அவனும் சிரித்தான். இருவரும் சிரித்துக்கொண்டே தியேட்டருக்குள் நுழைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/116&oldid=1384839" இலிருந்து மீள்விக்கப்பட்டது