பக்கம்:சுயம்வரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சுயம்வரம்


நிம்மதியை ஓரிரு நாட்கள் குலைத்திருக்கிறேன் என்று இன்று தான் எனக்குத் தெரிந்தது; அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்!" என்றாள்.

"நீயாவது என் நிம்மதியை ஓரிரு நாட்கள் குலைத்ததோடு நின்றாய்; நான் உன்னுடைய ஆசையையே அல்லவா நிராசையாக்கி விட்டேன்!" என்றான் அவன், தன் கண்கள் பனிக்க.

"எனக்காக நீங்கள் ஏன் அழ வேண்டும், அத்தான்? உங்களுக்காக நான்தான் அழவேண்டும்!" என்றாள் அவள், தன் கண்களில் பெருகி வந்த நீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டே.

அதற்குள், "அவனுக்காக அழுததெல்லாம் போதாதா, இன்னுமா அழ வேண்டும்? வாவா, வண்டிக்கு நேரமாச்சு!" என்று அவள் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார் மாமா.

"நான் அன்றைக்கே சொன்னேன் - 'பட்டணத்துப் பிள்ளையாண்டானுக்கும் நமக்கும் ஒத்து வராது, ஊரோடு இருக்கும் என் அண்ணன் மகனுக்கே உன்னைக் கொடுத்து விடலாம்' என்று; இவர் கேட்டாரா?" என்றாள் மாமி, தன் கையை நீட்டி மாமாவின் கன்னத்தில் ஓர் இடி இடிக்காத குறையாக.

"இப்படி வந்து அவமானப்பட வேண்டுமென்று என் தலையில் எழுதி வைத்திருக்கிறதே, அது என்னை விடுமா?" என்றார் மாமா வேதனையுடன்.

இதைக் கேட்டதும் மாதவன் சட்டென்று குனிந்து அவருடைய கால்களைத் தன் இரு கைகளாலும் பற்றி, "என்னை மன்னித்துவிடுங்கள், மாமா" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/147&oldid=1384883" இலிருந்து மீள்விக்கப்பட்டது