பக்கம்:சுயம்வரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சுயம்வரம்

“என்னடியம்மா, உனக்கு ‘காதல் இல்லாமல் கலியாணமா?’ என்றாய். காதலித்தோம்; கலியாணமும் செய்து கொண்டோம். இப்போது ‘ஊடல் இல்லாமல் கூடலா?’ என்கிறாயா? இல்லை, பால், பழம், பட்சணம், பட்டு மெத்தை, பூச்சரம், தொங்கும் கட்டில், புகையும் நறுமணம், புகையாத அத்தர், புனுகு - இதெல்லாம் இல்லாமல் ‘சாந்திக் கலியாண’மா என்கிறாயா? அப்படியென்றால் இரு; இதோ, நானே போய் அதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்துவிட்டு வருகிறேன்!” என்று அவன் சிட்டாய்ப் பறந்தபோது, ‘களுக்’கென்ற சிரிப்பொலி அவனுடைய காதில் விழுந்தது.

திரும்பிப் பார்த்தான்; உதட்டைக் கடித்த மதனா கடித்த சுவடு தெரியாமல், “வவ்வவ்வவ்வே!” என்று அவனுக்கு ‘அழகு’ காட்டினாள்!

அன்றிரவு; ‘சாந்திக் கலியாண’த்துக்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு, ‘அப்பாடா!’ என்று பட்டு மெத்தையின்மேல் சாய்ந்தான் மாதவன்.

அப்போது ‘கும்’மென்ற மல்லிகை மணத்துடன் சர்வாலங்காரதாரியாக அங்கே வந்து நின்ற மதனா, “கொஞ்சம் பொறுங்கள்; பாலைச் சுண்டக் காய்ச்சி, பாதாம் பருப்பை அதில் அரைத்துக் கலக்கி எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்!” என்று திரும்பினாள்.

“நீயாகவே வந்துவிடு; உன்னைப் பிடித்து உள்ளே தள்ளி வெளியே தாழ் போட இங்கே எந்தத் தோழியும் இல்லை!” என்றான் ஹீரோ சிரித்துக்கொண்டே.

“உக்கும்” என்று “ஹீரோயின்” தன் அழகான வதனத்தை இன்னும் அழகாக ஒரு வெட்டு வெட்டித் திருப்பிக்கொண்டு, அடுப்படியை நோக்கி “அழகு நடை” நடந்தாள்.

இன்பம் உச்ச கட்டத்தை எட்ட இருந்த இந்தச் சமயத்தில், வெளிக் கதவை யாரோ ‘தடதட’வென்று தட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/15&oldid=1384804" இலிருந்து மீள்விக்கப்பட்டது