பக்கம்:சுயம்வரம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

149


அதையும் உற்றுக் கேட்டான் அவன் - ஆம், அது அவளுடைய சிரிப்பொலியேதான்!

என்னதான் ஒருவருக்கொருவர் பிடிக்காமற் போகட்டும்; என்னதான் ஆசாபாசங்களுக்கு உள்ள கட்டும். மனிதர்கள் இப்படியும் மிருகங்களாக மாறுவதுண்டா?...

இது புதிய அனுபவமாயிருந்தது அவனுக்கு.

கோழையையும் கொதித்தெழச் செய்யும் அந்த ஒலிகளைக் கேட்டபின் அவனால் சும்மா இருக்க முடியுமா? தன்னை யார் கவனிக்கிறார்கள், யார் கவனிக்கவில்லை என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவன் அங்குமிங்கும் ஓடினான்; அவர்கள் இருந்த அறையைத் தேடினான். பல அறைகள் கொண்ட அந்த பங்களாவில் அவர்கள் இருந்த அறையைக் கண்டு பிடிப்பது அவ்வளவு எளிதாயில்லை!

எங்கே சென்றாலும், எங்கே நின்றாலும் அந்த ஒலிகள் அவனுக்கு அருகிலேயே ஒலிப்பனபோல் ஒலித்தனவே தவிர, அவற்றுக்குரிய அறையை அவனால் என்ன முயன்றும் கண்டுபிடிக்கவே முடியவில்லை!

'இப்படியும் ஒரு வீடா, இப்படியும் தனக்கு ஓர் அனுபவமா? இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தால் தனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போல் இருக்கிறதே!' என்று நினைத்துக்கொண்டே அவன் சுற்றுமுற்றும் பார்த்த போது, சற்றுத் தூரத்தில் ஒரு 'டீபா'யின் மேல் வைக்கப் பட்டிருந்த 'போன்' அவன் கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் அவன் என்ன நினைத்தானோ என்னவோ, ஒரே தாவில் அந்த இடத்தைத் தாவி அவன் முதல் காரியமாகப் போலீஸ் உதவிக்குப் போன் செய்தான். அதே சமயத்தில் அவனுக்கு எதிர்த்தாற் போலிருந்த ஓர் அறையின் கதவைத் திறந்து கொண்டு ஆனந்தன் அருணாவுடன் வெளியே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/152&oldid=1384896" இலிருந்து மீள்விக்கப்பட்டது