பக்கம்:சுயம்வரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சுயம்வரம்

சீட்டாட இன்னொரு கை இருந்தால் தேவலை என்கிறார்; நீ வாயேண்டா ப்ளீஸ்!”

“ஏன், நீ ஆடினால் என்னவாம்?”

“காலையில் கலியாணம் செய்துகொண்டவன் ராத்திரி மாமாவுடன் தான் சீட்டாடிக்கொண்டிருப்பானாக்கும்?”

“அந்த விஷயம் தெரியுமா, அவருக்கு?”

“எந்த விஷயம்?”

“நீ மதனாவைக் கலியாணம் செய்துகொண்ட விஷயம்தான்!”

“தெரியாது.”

“அப்படியானால் அதை முதலில் அவரிடம் சொல்லி விட்டு...” என்று அவனைப் பிடித்து அப்பால் தள்ளிவிட்டு உள்ளே நுழைய முயன்றான் ஆனந்தன்.

“ஐயோ, வேண்டாண்டா; நீலாவும் வந்திருக்காடா! ப்ளீஸ், ப்ளீஸ்!” என்று அவனைக் கெஞ்சு, கெஞ்சு என்று கெஞ்சினான் மாதவன்.

“சரி, ஒரு நிபந்தனை நீயும் எங்களோடு சேர்ந்து விடிய விடியச் சீட்டாட வேண்டும்; ஆடுகிறாயா?”

“ஆடித் தொலைக்கிறேன்!”

“அப்படியானால் இன்னொரு கை வேண்டுமே? இங்கேயே இரு; இதோ போய் அழைத்துக்கொண்டு வந்து விடுகிறேன்!” என்று ‘ஜெட்’டாய்ப் பறந்தான் ஆனந்தன்.

மாதவன் மூக்கால் அழுதுகொண்டே ஒரு கடிதம் எழுதி ஜன்னல் வழியாக மதனா ‘சிறை இருந்த அறை’க்குள் போட்டுவிட்டு, ஆனந்தன் என்னும் அந்த ‘மாபாவி’யை எதிர்பார்த்து நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/23&oldid=1384914" இலிருந்து மீள்விக்கப்பட்டது