பக்கம்:சுயம்வரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

23

பாட்டை நாங்கள் கேட்க மாட்டோம்; உன்னுடைய ஆட்டத்தை நாங்கள் பார்க்க மாட்டோம்!’ என்று ரசிகர்கள் அத்தனை பேரும் அவளைக் கைவிடக்கூடிய நேரம் வந்த பிறகு, இவ்வளவு பெரிய உலகத்தில் அவள் பாடுவதைக் கேட்கவும், ஆடுவதைப் பார்க்கவும் ஒரே ஒரு ரசிகனாவது அவளுக்கு வேண்டாமா? அந்த ரசிகனும் தன் கை பிடித்த கணவனாக இருந்தால், அவனை அப்படி இப்படி நகர விடாமல் கட்டிப் போட்டுவிட்டாவது அவனுக்கு முன்னால் அவள் ஆசை தீரப் பாடவும் பாடலாம், ஆடவும் ஆடலாம், இல்லையா?

நல்ல வேளையாக உனக்கு அந்தக் குறையெல்லாம் இல்லை. அழகில் மிஸ் மெட்ராஸ், மிஸ் இண்டியா எல்லாம் உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும். சமைப்பதில் அந்த நாளிலேயே தமயந்தி கெட்டிக்காரியாக இல்லை; நளன்தான் கெட்டிக்காரனாக இருந்திருக்கிறான். அவனுக்கு நான் நேர் வாரிசு; ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொள்ளலாம். வக்கணையாகப் பேசுவதில் உன்னை மிஞ்ச இந்த உலகத்தில் வேறு ஆளே கிடையாது. இலங்கை வானொலிக்காரன் புண்ணியத்தால் ‘நான் ஒரு குழந்தை, நீ ஒரு குழந்தை, ஒருவர் மடியிலே ஒருவரடி’ என்று உனக்குப் பாடவும் தெரியும்; பாடிக் கொண்டே ஆடவும் தெரியும். ஒருவிதத்தில் நம் இருவரையும் ‘நிஜக் குழந்தை’களாகவே மாற்றிவிடக் கூடிய நம்முடைய ‘முதல் இர’வில் அந்த ஒரு பாடலும் ஆடலும் போதாதா, நாம் சாந்தி காண?

போதும். ஆனால்...

காதற் கிளியே!

‘கட்டுண்டோம். பொறுத்திருப்போம், காலம் மாறும்’ என்று பாடினான் பாரதி. அவனை விட்டால் எழுத்தாளர்களுக்கும் வேறு கதியில்லை; காதலர்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/26&oldid=1384955" இலிருந்து மீள்விக்கப்பட்டது