பக்கம்:சுயம்வரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

29


மதனாவோ, 'இந்த அதிகாரப் பித்து யாரைத்தான் விடுகிறேன் என்கிறது? ஒரு தெரு நாய்கூட, இன்னொரு தெரு நாயின் மேல் அதிகாரம் செலுத்தத்தான் விரும்புகிறது!' என்று தனக்குத் தானே பொருமியபடி, அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நின்றாள்.

அப்போது, "இது என்னடியம்மா, கூத்து! நேற்றுத்தான் நீ யாரையோ கலியாணம் பண்ணிக் கொண்டதாகச் சொன்னார்கள். இன்று, இங்கே, இப்படி ஒற்றைக் காலில் வந்து நிற்கிறாயே?" என்று நீட்டி முழக்கினாள் அவளுக்குத் தெரிந்த மூதாட்டி ஒருத்தி அங்கே வந்து.

'அப்பப்பா வயசுப் பெண்களெல்லாம் கண் தெரியவில்லை என்று கண்ணாடி போட்டுக்கொள்ளும் இந்தக் காலத்தில், இவளைப் போன்ற கிழவிகளுக்கு மட்டும் ஏன்தான் இந்த எக்ஸ்ரே கண்களோ?' என்று முணுமுணுத்த மதனா, வராத சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, "நான் எங்கே ஒற்றைக் காலில் நிற்கிறேன்? எல்லாம் இரட்டைக் காலில்தான் நின்று கொண்டிருக்கிறேன்" என்றாள்.

"நான் அதைச் சொல்லவில்லையடி, உன் அகத்துக்காரர் எங்கே என்று கேட்கிறேன்!"

"அவர்தான் 'அகத்துக்கார'ராச்சே. அகத்தில்தானே இருப்பார்?"

"பரிகாசம் பண்ணாதே! எடுக்கும் போதே நீ இப்படியெல்லாம் தனியாக வந்து நிற்கக் கூடாது. எங்கே போனாலும் சேர்ந்து போகணும், எங்கே வந்தாலும் சேர்ந்து வரணும்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/32&oldid=1384932" இலிருந்து மீள்விக்கப்பட்டது