பக்கம்:சுயம்வரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

33

"கொடுக்க வேண்டாமென்று சொல்லிவிட்டாரா?"

"ஆமாம்."

"அவர் சொன்னால் நீ அதை அப்படியே கேட்டுக் கொண்டு விடுவதா?"

"கேட்காமல்..."

"என்னைவிட அவர் உனக்கு எந்தவிதத்தில் ஒசத்தி?"

"நன்றாய்க் கேட்டாய், போ அவன் உன்னை மட்டும்தான் காதலித்துக் கொண்டிருந்தான் என்று நீ இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாயா? என்னையும் தான் காதலித்துக்கொண்டிருந்தான். ஒரு காதலன் அப்படிச் சொல்லும்போது ஒரு காதலி அதைக் கேட்காமல் இருக்க முடியுமா? அதுவும் உன்னைப் போலவே நானும் அவனைப் பரிபூரணமாக நம்பிக்கொண்டிருந்த அந்த நாட்களில்!"

"அப்படியானால்..."

"அவன் உன்னை ஏன் கலியாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிறாயா? பழி வாங்கடி, பழி வாங்க!"

"எதற்காக அவர் என்னைப் பழி வாங்க வேண்டுமாம்?"

"அது ஒரு வேடிக்கையான கதையடியம்மா, வேடிக்கையான கதை!"

"அந்தக் கதையைத்தான் கொஞ்சம் சொல்லேன்?"

"அப்கோர்ஸ் ஆனந்தனைத் தெரியுமா, உனக்கு?"

"ஏன் தெரியாது, நன்றாய்த் தெரியுமே! அவனும்தானே இவருடன் சேர்ந்து கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான்?"

"அவரைக் கேள், சொல்வார்!"

சு-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/36&oldid=1384945" இலிருந்து மீள்விக்கப்பட்டது