பக்கம்:சுயம்வரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

41



-

“'கொடுடி, கொடுடின்னா'” என்ற மாமியின் குரல் அவன் காதில் விழுந்தது.

‘என்னத்தைக் கொடுக்கச் சொல்கிறாள் மாமி, இந்தப் பட்டப் பகலில்?’ என்று அவன் திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்க்க, நீலாவின் கையில் முகம் துடைக்கும் துண்டு ஒன்றைத் திணித்துவிட்டு, “'போடி, போடின்னா”' என்று கட்டை வண்டிக்குப் பின்னால் தலையை முட்டுக் கொடுத்துத் தள்ளும் வண்டிக்காரன் போல, அவள் முதுகில் கையை வைத்துத் தள்ளிக்கொண்டிருந்தாள் மாமி.

'என்ன கஷ்டம், என்ன கஷ்டம்' என்று அவளுக்குத் தெரியாமல் தன் தலையில் அடித்துக்கொண்டே, "அவளுக்கு ஏன் மாமி, அனாவசியமா தொந்தரவு கொடுக்கிறீங்க?" என்றான் மாதவன், அந்த ஆபத்திலிருந்து தப்ப.

'அனாவசியம் என்ன, அனாவசியம் கலியாணத்துக்கு ஒரு பையன் இருக்கிறான்னா, கண்டவளெல்லாம் மேலே விழுந்து பழகுகிற காலமாச்சே, இது? இந்தக் காலத்திலே இவள் இவ்வளவு கட்டுப்பெட்டியாகவா இருப்பது?"

'“அதற்காக அவளை இப்போது என் மேலே விழுந்து பிடுங்கச் சொல்கிறீர்களா, என்ன? ” 'மேலே விழுந்து பிடுங்க வேண்டாம்; எட்ட இருந்தாவது பிடுங்கலாமோ, இல்லையோ?" என்ற அவள், '“போடி, போடின்னா”' என்று தன் மகளை மறுபடியும் மாதவனை நோக்கித் தள்ளிவிட்டாள்.

அவளோ சண்டி மாடு மாதிரி நின்ற இடத்திலேயே நின்று கொண்டு, 'எனக்கு வெட்கமாயிருக்கு, அம்மா!' என்றாள்.

'இந்தக் காலத்திலே அவர் இல்லேடி, உன்னைப் பார்த்து வெட்கப்படனும்? நீ எதுக்கு வெட்கப்படறே பயாஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/44&oldid=1384935" இலிருந்து மீள்விக்கப்பட்டது