பக்கம்:சுயம்வரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

45

தூக்கிக் கொண்டு போய் டாக்ஸியில் போட்டுவிடுவார் போலிருந்தது.

வேறு வழியின்றி, ‘மதனா! நேற்றும் உன்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கினேன்; இன்றும் உன்னை ஏமாற்றத்துக்குள்ளாக்குகிறேன். என்னை மன்னித்து விடு, மதனா!’ என்று மானசீகமாக வேண்டிக்கொண்டே, சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான் மாதவன்.

காதல் என்பதும் தொடர்கதைதான்,
கணக்கே இல்லாதது!...

6

மாலை மணி ஐந்தும் ஆயிற்று, ஆறும் ஆயிற்று; மாதவனைக் காணோம். அவனுக்காக மதனா நாலரை மணிக்கே விடுதியை விட்டு வெளியே வந்து காத்திருந்ததுதான் மிச்சம்; வந்தது அவன் அல்ல; கொட்டாவி

ஆஆஆவ்வ்வ்!...

அவள் தன் இருபத்தோராவது கொட்டாவியை இத்தனை அட்டகாசமாக விட்டுக்கொண்டிருந்தபோது, அவளுடைய வாய்க்கு அருகே யாரோ ஒர் ஆண் பிள்ளையின் கை நீண்டது. நீண்ட கை சும்மா இருக்கவும் இல்லை; விரலைச் சொடுக்கி ‘டிக், டிக், டிக்’ என்று மும்முறை சிட்டிகையும் போட்டு வைத்தது.

மிரண்டு போய்த் திரும்பினாள் மதனா, அசடு வழிய அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த ‘அப்கோர்ஸ் ஆனந்தன்’, “ஒன்றுமில்லை; கொட்டாவிக்கு ‘சென்ட் ஆப்’ கொடுத்தேன், அவ்வளவுதான்!” என்றான்.

“நீங்களா!” என்றாள் அவள், ஏமாற்றத்துடன்.

“ஏன், மாதவன் என்று நினைத்தாயா? அவன் தன் எதிர்கால மனைவி நீலாவுடன் சினிமாவுக்கல்லவா போயிருக்கிறான்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/48&oldid=1385100" இலிருந்து மீள்விக்கப்பட்டது