பக்கம்:சுயம்வரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ‘எங்கேஜ்ட்’ ஆட்டோவிற்கும் டாக்சிக்கும்
மட்டும்தானா? ‘டீன் ஏஜ்’ ஆண்களுக்கும்
பெண்களுக்கும் அது இல்லையா?...

8


ன்னை யார் கைவிட்டாலும் கைவிடாவிட்டாலும் தன் உயிரை இந்த மதனா கைவிட மாட்டாளாமே?...

என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு

இப்படிப்பட்டவளிடமிருந்து அந்த மாதவனைப் பிரித்து, அவனைத் தான் அடைவது சாத்தியமா?...

சாத்தியமோ இல்லையோ, அதற்காக அவனுடைய விருப்பத்துக்கு அவனை விட்டுவிடுவதா? அதே மாதிரி, இவளுடைய விருப்பத்துக்குத்தான் இவளை விட்டுவிடுவதா?

அப்படி விடுவதாயிருந்தால் அன்றே, இவர்கள் இருவரும் கலியாணம் செய்துகொண்ட அன்றே விட்டிருக்கலாமே? அன்றிரவே இவர்களைப் பிரித்து வைக்க முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாமே?

இந்த ஆனந்தன்...

இவனுக்கு மதனாதான் வேண்டுமென்பதில்லை; யாராவது ஒர் ஆண் பிள்ளை வேடிக்கைக்காகப் புடவையைக் கட்டிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால் கூடப் போதும், அவனை இவன் மோப்பம் பிடித்தபடி, அவனுக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருப்பான்!

வாழ்க்கை எத்தனையோ பேருக்கு எத்தனையோ விதமாகத் தோன்றுகிறது; இவனுக்கோ அது ஒரு விளையாட்டாகத் தோன்றுகிறது.

இவன்தான் இதுவரை எத்தனை பெண்களைக் காதலித்திருக்கிறான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/62&oldid=1385126" இலிருந்து மீள்விக்கப்பட்டது