பக்கம்:சுயம்வரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

அந்த ஆதரவு வேறு எந்த நாவலுக்கும் இல்லாத அளவுக்கு இன்றுவரை நீடித்து நின்று வருகிறது.

அந்த நாவல் வெளியான காலம் ‘சாகித்திய அகாடமி’ என்ற ஓர் அமைப்பு தோன்றாத காலம். தோன்றியிருந்தால், ‘பாலும் பாவையும்’ கூட அந்த நாளிலேயே அது அளிக்கும் பரிசைப் பெறும் தகுதியை முதன்முதலாகப் பெற்றிருக்கலாம்.

‘மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லப் படுவது உண்மையானால், அதன் தீர்ப்பு மட்டும் வேறு விதமாகவா இருந்திருக்கப் போகிறது?

அது மட்டுமல்ல; ‘திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்று சொல்லிவிட்டுப் போனான் பாரதி. அந்தப் புலமையை என் கதைகளிலும் கண்டதால்தானோ என்னவோ, அவற்றில் பல இந்திய திராவிட மொழிகளில் மட்டுமல்ல; உலகமெங்கும் உள்ள பல முற்போக்கு நாடுகளில் பல அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ‘பாலும் பாவையும்’ என்ற நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள், பல சிறுகதைத் தொகுப்புகள், பல கட்டுரைத் திரட்டுகள் எல்லாம் வெளிவந்திருக்க வேண்டும்.

வரவில்லை - ஏன்?

காரணம் வேறு யாருமல்ல; நானே!

‘ஏதோ ஏதோ ஒரு மயக்கம்’ என்கிறார்களே, சினிமாவில் வரும் காதலர்கள் - அப்படி ஒரு மயக்கம் அடியேனையும் அந்நாளில் ஆட்கொண்டது. அதன்காரணமாகப் பல வகைகளில் எனக்குக் ‘கற்பகத் தரு’வாக இருந்து வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/8&oldid=1384557" இலிருந்து மீள்விக்கப்பட்டது