பக்கம்:சுயம்வரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சுயம்வரம்


மாதவன் இப்படியெல்லாம் எண்ணி மேலே என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தபோது, "இன்று நாங்கள் ஊருக்குப் போகலாம் என்று இருக்கிறோம்" என்றார் மாமா, அவனிடம் வந்து.

இதைக் கேட்டதும் உண்டான ஆனந்தத்தில் அவரை அப்படியே கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றிற்று அவனுக்கு. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், "என்ன அவ்வளவு அவசரம்?" என்றான் ஒரு பேச்சுக்கு.

"கேட்க வேண்டிய கச்சேரியெல்லாம் கேட்டாகி விட்டது; பார்க்க வேண்டிய காட்சியெல்லாம் பார்த்தாகி விட்டது. இனி இங்கே என்ன வேலை எங்களுக்கு? உன் அப்பாவும் அம்மாவும் வேறு ஊரில் இல்லை; அதனால் நாங்கள் வரும்போது நினைத்துக்கொண்டு வந்த இன்னொரு விசேஷமும் தடைப்படுகிறது..."

"அது என்ன விசேஷம்?"

"வேறு என்ன விசேஷம், உன்னுடைய கலியாண விசேஷம்தான்?"

இதற்கு என்ன சொல்வான் மாதவன்? "ஓகோ" என்று சொல்லி வைத்தான்.

"அது சம்பந்தமாக உனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இருக்காதென்று நினைக்கிறேன்!"

இதைக் கேட்டதும், 'இருப்பதற்கு இனிமேல் என்ன இருக்கிறது?' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது அவனுக்கு; ஆனால் சொல்லவில்லை. 'மௌனம் சர்வார்த்த சாதகம்' என்று பேசாமல் இருந்தான்.

"உன்னுடைய மௌனத்திலிருந்தே உனக்கு அதில் பூரண சம்மதம் என்று தெரிகிறது. அப்பாவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/89&oldid=1384789" இலிருந்து மீள்விக்கப்பட்டது