பக்கம்:சுயம்வரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சுயம்வரம்

"அதற்காக நான் அழப்போவதில்லை ; நீங்கள் அழப் போகிறீர்களா? அழுங்கள்" என்று அவள் திரும்பினாள்.

அப்போதும் அவன் அவளை விடவில்லை ; இப்படியும் அப்படியுமாக ஆடி அசைந்து நடந்து கொண்டே, "உண்மையிலேயே அதை நினைத்தால் எனக்கு அழுகை வரத்தான் செய்கிறது, மதனா! எல்லாப் பெண்களையும்போல நீயும் ஒரு இருபது இருபத்தைந்து வருஷ காலம் அந்த உதவாக்கரைப் பயலுக்கு மனைவியாக வாழ்ந்து, அதற்குப் பின் இருக்க இடத்துக்கும், தின்னச் சோற்றுக்கும், கட்டத் துணிக்கும் பெற்ற பிள்ளைகளிடமும், கொண்ட மருமக்களிடமும் அல்லல்படும் மாமியாகவும், பாட்டியாகவும் வாழப் போகிறாயா? யோசித்துப் பார்! ஆண்களுக்கு வேண்டுமானால் அதை விட்டால் வேறு வழியில்லாமல் இருக்கலாம். பெண்களுக்கு, அதிலும் உன்னைப் போன்ற அழகான பெண்களுக்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்காக நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதாவது 'கற்பு, கற்பு' என்று ஒரு 'கதை' விட்டுக் கொண்டிருக்கிறார்களே, நம் நாட்டில் - அந்தக் கற்பை 'உண்மையாகவே கதைதான்' என்று துணிந்து நீ தூக்கி எறிய வேண்டும்.

அந்தக் கவைக்குதவாத கற்பைப் பற்றி நீயும் மாதவனும் கூட ஒரு சமயம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தீர்களே, நினைவிருக்கிறதா உனக்கு? 'மேல்நாட்டில் இருப்பதுபோல இங்கும் ஒருத்தி ஒருவனுடன் இருக்கும்போது மட்டும் கற்புடன் இருந்தால் போதும்; அந்த ஒருவன் மறைந்த பிறகு அவள் இன்னொருவனைத் தேடிக்கொள்ள அந்தக் கற்பு அவளுக்குக் குறுக்கே நிற்க வேண்டாம். அதனால் என்ன நடக்கிறது? ஒழுக்கக் குறைவும், பிறருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்து கொள்ளும் கருச்சிதைவும்தான் நாளுக்கு நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/95&oldid=1384809" இலிருந்து மீள்விக்கப்பட்டது