பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g: சுரதா ஓர் ஒப்பாய்வு 109 பைரன் கடைசிவரையில் ஏதும் எழுதாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். போட்டி முடியும் நேரம் வந்தது. மேற்பார்வையாளர் பைரனைப் பார்த்து, 'என்ன தம்பி! ஏன் சும்மா உட்கார்ந் திருக்கிறாய்? ஏதாவது எழுதிக் கொடுத்து விட்டுப் போ!' என்றார். உடனே பைரன் ஒரே ஒரு வரிமட்டும் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறினான். பரிசு அறிவிக்கப்பட்டபோது, அது பைரனுக்குக் கிடைத் திருந்தது. அவன் எழுதியது இதுதான்: காதலன் பார்க்கக் கன்னி முகஞ்சிவந்தாள்.' Lord என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கர்த்தர் என்றோ, கனவான் என்றோ, காதலன் என்றோ எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். நிறமற்ற நீர், திராட்சைச் சாறாகச் சிவந்த செயலைக், காதலன் பார்த்ததும் ஒரு பெண் நாணி முகம் சிவக்கும் செயலாகச் சித்திரிக்கிறான். இங்குக் காதலன் இயேசு; காதலி நீர். பதினைந்து வயதில் பைரன் வெளிப் படுத்திய புலமை நுட்பமிது. தமிழ் இலக்கியத்தில் இதுபோன்ற நுட்பங்கள் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகின்றன. பாலை பாடிய பெருங் கடுங்கோவின் கற்பனை யொன்றை நான் அடிக்கடி எண்ணி வியப்பதுண்டு. தலைவன் பொருள்வயிற் பிரிய மனத்தால்