பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 கவிஞர் முருகு சுந்தரம் شه நினைக்கிறான் என்பதைக் குறிப்பால் உணர்ந்த தலைவி, அப்பிரிவுத் துன்பத்தை உள்ளத்தில் நினைத்துக்கண்கள் பனிக்க ஒரு பெருமூச்சுவிடுகிறாள். அப்போது அவள் இடுப்பில் கைக்குழந்தை இருந்தது. அக் குழந்தையின் தலையில் பூக்களால் தொடுத்த செங்கழுநீர் மாலை. அவளுடைய வெப்பமான பெருமூச்சு பட்டதும், அச் செங்கழுநீர் மாலை நிறம் மாறி வாடிவிட்டது. இதைக் கண்ட தலைவன், தலைவியின் உள்ளத்து ஆற்றாமையை உய்த்துணர்ந்து பயணத்தைத் தவிர்த்தான்." கடுங்கோ எவ்வளவு நுட்பமாகச் சிந்தித்திருக் கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள். இவ்வளவு நுட்பமான ஒரு கற்பனையைச் சங்க இலக்கியத்தில் வேறு எங்கும் காணமுடியாது. இதே போன்ற நுட்பமான கற்பனையொன்றை நளவெண்பாவில் காணலாம். தமயந்தியின் சுயம் வரத்தின்போது, தோழியொருத்தி மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைத் தமயந்திக்கு அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்க நாட்டிளவரசனை அறிமுகப் படுத்தும்போது, அவன் நாட்டின் சிறப்பை வருணிக்கிறாள். கடலில் இருக்கும் சங்குப் பூச்சிகளை அலைகள் அடித்துக் கொண்டுவருவது இயல்பான நிகழ்ச்சி. அலைகள் மிகுதியாக இருக்கும்போது, அவை