பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா ஓர் ஒப்பாய்வு 9 கவியுள்ளம் கனிந்திட வேண்டுமே. ஆழங்கால் படுதல் என்று தோய்ந்திருக்கும் நிலையைச் சுட்டுவதையும் கருதவேண்டும். எடுத்தேன், எழுதினேன்; இதோ கவிதை!- என்கிற நமது நிலை கவிதைக் கலையை நாம் அறியாமல் இருக்கிறோம் என்பதன் வெளிப்பாடு. கவிஞனும் சுவைஞனும் நெருங்கிய நண்பர்களாகவே இருப்பர். இருவரது நிலையும் கலையும் பிரிக்க முடியாதவை. பல்லாண்டுகளாகக் கவிதை எழுதுவதைக் கைவிட்ட கவிஞர் வேறு புதுமையான வரலாற்றைப் படைத்து வருகிறார். வரலாற்றுப் பார்வையுள்ள இவர் புதிய வரலாறுகளைத் தொடர்ந்து படைத்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். சிறந்த தமிழ் அறிஞர்களின் பிறந்த ஊர்களில் மண் எடுத்தார். பல துறைகளில் கவிஞர்களைக் கொண்டு பல கவியரங்குகளை நடத்திச் சாதனை புரிகிறார். சிலைக் கவியரங்கமும் அதன் தொடர்ச்சியே. தெருவுக்குத் திருவிழா, இல்லந்தோறும் திருவள்ளுவர் படத்திறப்புவிழா, வீடுகளில் கல்வெட்டுப் பொன்மொழி பதிக்கச் செய்தல் போன்ற பல புதுமைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். ஒருவர் பிறந்த தேதியில் பிறந்த புகழ்பெற்றவர்கள், ஒருவர் திருமணம் புரிந்த திங்களில் திருமணம் புரிந்து கொண்ட புகழாளர்கள், குறிப்பிட்ட திங்களில் வெளியான தமிழ்க் கவிதை நூல்கள் என்னும் பட்டியல்களைத் தொகுத்து நால்களில் வெளிவரச் செய்து, புதிய வரலாற்றைப் படைத்து வருகிறார். இவரது அரிய செய்திக் குறிப்புகளின் தொகுப்பு நாட்டுக்கும் மொழிக்கும் தேவையானது. முறையாக அதை வெளிப்படுத்தினால்