பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#31 சுரதா ஓர் ஒப்பாய்வு ثقيقي முன்னுரை குட்டரோகி கூறுகிறார்: நீங்க இப்பப் படிச்சுக் காட்டின பாட்டெல்லாம் பச்சையாப் புரியுதுங்க! கேக்கறதுக்கு ரொம்ப நல்லாருக்குங்க! எனக்கு இப்ப வயது அறுபது ஆவுது. இதைக் கேட்டதும் பழைய ஞாபக மெல்லாம் வருதுங்க! சென்னையில் வாமும் ஒரு குட்டரோகி 27.8,60. கவிதை முன்னுரை பண்டைக்காலத்தில் கவிதை நூலுக்கு முன்னுரையாக யாரேனும் ஒர் அறிஞரிடம் சாற்றுக் கவி பெறும் வழக்கமிருந்தது; இந்நூற்றாண்டில் அவ்வழக்கம் மாறி, ஆசிரியரோ பிறரோ உரைநடையில் முன்னுரை எழுதும் வழக்கம் ஏற்பட்டது. இப்போது கவிதையிலேயே கவிதை நூலுக்கு முன்னுரை எழுதும் வழக்கம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. கவிதை நூல்களுக்கு மட்டு மன்றி, சிறுகதை, புதினங்களுக்கும் கவிதையில் முன்னுரை வழங்கும் வழக்கத்தைச் சுரதா மேற்கொண்டிருக்கிறார். அவர் எழுதிய முன்னுரைகளில், தம்முடைய நூலான பட்டத்தரசிக்கு அவர் எழுதிய முன்னுரை