பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கவிஞர் முருகு சுந்தரம் شه குறிப்பிடத் தக்கது. உண்மையாகச் சொன்னால், பட்டத்தரசியைவிட அதன் முன்னுரையே அழகும், செறிவும், நயமும் மிக்கது. திராவிட இயக்கம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் 'கொங்குதேர் வாழ்க்கை என்ற குறுந்தொகைப் பாடலை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட நெடுங்கவிதை பட்டத் தரசி. அதன்பாட்டுடைத்தலைவன்.நக்கீரன். கலைஞர் மு.கருணாநிதி நடத்திய முரசொலி இதழில், இக்கவிதை முதன்முதலாக வெளியிடப்பட்டது. பட்டத்தரசி வெற்றிப் படைப்பு அன்று என்றாலும், அகவற்பாவில் எழுதப்பட்ட அதன் முன்னுரையில் சுரதா ஒரு வான வேடிக்கையே நடத்தியிருக்கிறார். அகவல் எழுதவிரும்புவோர் தம் உள்ளத்தில் அகப்படுத்த வேண்டிய பாடல் அது வாசல்... கொடுத்துச் சிவந்த குமணன் கைபோல் மேற்குவான் சிவந்து விளங்கு கின்றது. பொன்செய் கொல்லர் பொழுதுநிலை அறிந்து அடிக்கும் கருவியை ஒடுக்கு கின்றனர் ஒலைக் கணக்களின் வேலைநிற் கின்றது. சந்தனப் பொதிகை தனைவிட் டெழுந்து தென்றல் சோலையைத் தேடிவரு கின்றது. எதிர்பார்த் திருந்த மதுமலர்க் கூட்டம் வந்த காற்றுக்கு மணந்தரு கின்றது.