பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 சுரதா ஓர் ஒப்பாய்வு قيمي 'எச்சில் இரவில் அவர் எடுத்துக் கொண்ட கருப்பொருள் (theme) முக்கியமன்று. செய்யுளில் வழக்கமாகச் சொல்லும் சமாச்சாரங்களையே’ இதிலும் சொல்லியிருக்கிறார். ஆனால் கவிஞராகிய இவர், உரைநடையை ஏன் இங்கு வாகனமாக்கிக் கொண்டார் என்பதே சிந்தனைக்குரியது. செய்யுள் யாப்பில் ஏற்பட்ட சலிப்பா? இருக்கலாம். அல்லது உரைநடையிலேயே கவிதைச் சிற்பத்தைச் செதுக்கிப் பார்த்தாலென்ன?-என்ற ஆர்வமும் காரணமாக இருக்கலாம். இந்த ஆர்வம் இளங்கோவடிகளுக்கும் இருந்தது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எழுதினார். பாரதிக்கும் இருந்தது; வசன கவிதை எழுதினார். பாவேந்தருக்கும் இருந்தது; காதல் வாழ்வு எழுதினார். ‘வசன கவிதையே புதுக்கவிதை என்னும் தவறான எண்ணம் ஒன்று நம்மிடையே பரவியிருக்கிறது. "வசனகவிதை என்பதற்குப் பொருள் சொல்ல வேண்டுமானால், வசனத்தில் எழுதப்பட்ட கவிதை' என்றுதான் பொருள்கொள்ள வேண்டும். அவ்வாறு எழுதப்படும் வசன கவிதை மரபு (tradition) சார்ந்தும் இருக்கலாம்; புதுமை (Modernism) ர்த்தும் இருக்கலாம்.