பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

كيو சுரதா ஓர் ஒப்பாய்வு வசனகவிதை கொஞ்சம் தவறினாலும் வெறும் சொல்லடுக்காகிவிடும். செய்யுட்கவிதை எழுதுவதைவிட வசனகவிதை எழுதுவதற்குச் செறிந்த அறிவும், நுட்பமான ஆற்றலும் வேண்டும். இப்போது சுரதாவின் வசனகவிதைகளைப் படியுங்கள்: சு - 10 அவள்பல் முளைக்காமலும் நாவில் சொல் முளைக்காமலும் பிறந்தவள். முதல் பருவத்தில் அவள் ஒரு பேதை, மூன்றாம் பருவத்தில் அவள் ஒரு மங்கை; மாமன் மகன் அவளை மாலையிட்டபோது அவளொருமங்கல மடந்தை. அவள்வதனவட்டம் ஒரு நிலாநிலம். அவள் வாயிதழ்கள் சேர்ந்து பிறந்த செம்பவளங்கள். அவள் அழகு நெற்றி