பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி சுரதா ஓர் ஒப்பாய்வு 169 டிரைவர் காரை கழாஅர்த் துறைக்கு ஒட்டு' என்றார் சுரதா. வண்டி சற்று நேரத்தில் காவிரிக் கரையை அடைந்தது. முசிறிக்கருகில் மைல் கணக்கில் பரந்திருந்த அகண்ட காவேரி, இளைத்துப் போய் அவ்விடத்தில் ஒரு வாய்க்காலாக ஒடிக் கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் கழாஅர்த்துறை: என்று பெயர்ப் பலகை காணப்பட்டது. சுரதா காரில் இருந்து இறங்கி அவசரஅவசரமாக ஆற்றுச் சரிவில் ஓடினார். நானும் அவருடன் ஒடினேன். ஆற்று நீரை உள்ளங்கையால் எடுத்து முத்தமிட்டார் சுரதா என்ன இது? என்றேன் நான். 'நீயும் முத்தமிடு! இது எவ்வளவு வரலாற்றுப் புகழ்மிக்க இடம் ஆட்டன் அத்தி இங்குதானே நீரில் குடைந்து விளையாடினான் ஆதிமந்தி இந்தக் கரையில்தானே கண்ணிர் மாலை தொடுத்தாள்!" என்று சொல்லி மெய்மறந்து நின்றார். ஒ... உண்மையான ஒரு கவிஞனைக் கண்டேன்! 1975ஆம் ஆண்டு இந்திய நாடெங்கும் நெருக்கடி நிலை பிரகடனப்பட்டிருந்த நேரம். சென்னையில் தேசிய இலக்கியவாதிகளின் முக்கியமான இலக்கியக் கூட்டம். மேடையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும், திராவிட இயக்கத்தைக் கட்டோடு பிடிக்காத இலக்கியவாதிகளும் வீற்றிருந்தனர்.