பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கவிஞர் முருகு சுந்தரம் 4. சிலவே, மக்கள் கவனத்தைப் பெறுகின்றன; சில கீதங்கள் கேட்பாரின்றிக் காற்றோடு கரைந்து போகின்றன. கவிஞர் சுரதா, தமிழர் நெஞ்சில் நின்றுவிட்டவர். இவரை ஒதுக்கிவிட்டு, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை வரலாறு இல்லை. இந்த நாற்றாண்டில், தமக்குப் பின் ஒரு கவிஞர் படையையே வாரிசாக விட்டுச் சென்றவர் பாவேந்தர் பாரதிதாசன். வாணிதாசன், முடியரசன், சுரதா மூவரும் அப்படையின் முன் வரிசைக் கவிஞர்கள். வாணிதாசன் கருப்பொருள், நடை, யாப்பு ஆகிய வற்றில் நாற்றுக்கு நூறு பாரதிதாசனை அப்படியே பின்பற்றியவர். முடியரசன் பாரதிதாசனைப் பின்பற்றி னாலும்,பழைய தமிழ் மரபுகளிலும் சிந்தனைகளிலும் ஆழமாகக் கால்பதித்துச் சென்றவர். கரதா, 'சுப்புரத்தினதாசன் என்று தம்மை விளம்பரப் படுத்திக் கொண்டாலும், பாரதிதாசனுக்கும் இவருக்கும் உள்ள பொதுத்தன்மை மிகக் குறைவு. எண்சீர் ஆசிரிய விருத்தமும் எளிய நடையுமே இருவருக்கும் உள்ள பொதுத் தன்மை. கருப் பொருள், கொள்கைப் பிடிப்பு, சிந்தனைப் போக்கு, சொல்லாட்சி, அணி யாவற்றிலும் சுரதா பாரதி தாசனிடமிருந்து வேறுபடுகிறார்.