பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கவிஞர் முருகு சுந்தரம் شه ஆழமான, மெய்மறந்த லயிப்பும், ஈடுபாடும் சுரதாவுக்கு ஏற்பட்டுவிட்டன. படியெடுக்கும் போதெல்லாம் பாரதிதாசன் பாணியும் அவர் கையாளும் புதிய உத்திகளும் அவரைச் சிந்திக்க வைத்தன. பிறர் பாடல்களோடு, பாரதிதாசன் பாடல்களை ஒப்பிட்டு வியந்தார். ஆனால் பாரதி தாசனைப் போல் எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. பாரதிதாசனைப் போல் அல்லாமல், அவரிட மிருந்து வேறுபட்டும், அவரைவிடச் சிறப்பாகவும் எழுத முயற்சித்தால் என்ன என்று சிந்திக்கலானார். ஒரிரு பாடல்களை எழுதித், தம்முடையது என்று சொல்லாமல், தம்முடைய நண்பனுடையது என்று சொல்லிப் பாரதிதாசனிடம் காட்டியிருக்கிறார். தம்முடையது என்று சொல்லிக் கொள்ள அச்சம். பாரதிதாசன் உள்ளத்து உணர்ச்சிகளைப் பச்சை யாக வெளிப்படுத்துபவர். அவரிடம் பாராட்டுப் பெறுவது அவ்வளவு எளிதன்று. ஊம், நல்லாத்தான் இருக்குது என்று சொல்லிவிட்டாலே அது பெரிய பாராட்டு பிழையிருந்தால் கசக்கி முகத்தில் அடித்து விடுவார். உன்னையெல்லாம் எவன் கவிதை எழுதச் சொன்னான்? என்று சொல்லினாலேயே சுட்டு விடுவார்.