பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கவிஞர் முருகு சுந்தரம் شه மறுமலர்ச்சிக் காலக் கவிதைகள் மென்மையும், அழகும், இனிமையும் கொண்ட காதற் கவிதைகள்; வீர வழிபாட்டுக் கவிதைகள்; கிரேக்க ரோமானிய மரபுகளின் அடிப்படையில் நகலெடுக்கப்பட்ட கவிதைகள். சீர்திருத்தக் கவிதைகளோ, பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமயப்புரட்சியின் அடிப் படையில் தோன்றியவை.இவ்விரு காலக் கட்டத்திலும் தோன்றிய கவிதைகள் ஒரேஅச்சில் வார்க்கப்பட்டாற் போல் புதுமை ஏதுமின்றிச் செக்குமாட்டுத் தன்மை யோடு சுற்றிச் சுற்றி வந்தன. - ஒரு கனி எவ்வளவு சுவையானது என்றாலும் அதிகம் பழுத்தால் அழுகிப் போவதில்லையா? கவிதை மரபும் அப்படித்தான். கவிதை மரபில் காணப்படும் செக்கு சுற்றுத்தனம் படிப்பவர் உள்ளத்தில் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடும். இத்தகைய வெறுப்பு புதிய கவிதை இயக்கங்களாக ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் தலைதூக்கின. அவற்றுள் இத்தாலியில் தோன்றிய மாரினியமும் (Marinism), ஸ்பெயினில் தோன்றிய கங்கோரியமும்(Gongorism), இங்கிலாந்தில் தோன்றிய மெய்விளக்க வியமும் (Metaphyscism) குறிப்பிடத் தக்கவை.