பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கவிஞர் முருகு சுந்தரம் شه காலடிச் சுவடு நீண்ட வட்டமாக (Oval) இருக்கும். ஒட்டகத்தின் காலடிச் சுவடு கவராயத்தால் போட்ட வட்டம் போல் இருக்கும். இதைச் சுரதா கூர்ந்து கவனித்து நினைவில் பதித்து, முத்துக்களுக்கு உவமை கூறியிருப்பது வியப்பாக உள்ளது. 'தரைமீன்' என்றொரு பாடல். அதில் ஆட்டன் அத்திகழாஅர்த் துறையில் நீந்தி விளையாடுகிறான். கரையில் அவன் மனைவி ஆதிமந்தி நின்று, அவன் நீந்தும் அழகைக் கண்ணால் பருகிக் கொண்டிருக் கிறாள். அவன் நீரில் பாய்ந்து மூழ்கி, பின் நீர் மட்டத்திற்கு வருவதை, யானைத் தந்தம் கீழே சரிந்து நுனியில் மேல்நோக்கி வளைந்து வருவதற்கு ஒப்பிடுகிறார் சுரதா. மிகவும் நுட்பமான உவமை! பந்தெனவே காவிரியில் மிதந்தான்; நீரில் பாராங்கல் போலமிழ்ந்தான்; சேனை யானைத் தந்தமென மேல்நோக்கி எழுந்தான் அத்தி. சில சமயங்களில் சில உவமைகளுக்காக இவர் நெடுந்தொலைவு பயணம் செய்வதுண்டு. உடன் கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வரவேண்டுமென்று லார்டு பெண்டிங் துரைக்கு ராஜாராம் மோகன்ராய் எழுதிய கடிதத்தைச் சுரதா கவிதையாக்கியிருக்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அக்கடிதம் சுரதாவின் கைபட்டு, ஒரு வானவில்லாக மாறியிருக்கிறது. சுரதாவின் ஆற்றலுக்கு அப்பாடல் ஓர் உரைகல்.