உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

83



இன்பம்

எப்படியும் ஏழ்மைநிலை மாற வேண்டும்
இல்லாவிட் டால்உடனே மாற்ற வேண்டும்
அப்போது தான்நாட்டில் வாழும் மாந்தர்
அனைவர்க்கு மேஇன்பம் கிடைக்கும்.........

–இதழ் : ‘காவியம்’ (10–2–56)

கொட்டைகைக்குத் தீவைத்தல்; குறும்பு செய்தல்,
        குடிகெடித்தல் அத்தனையும் துன்பம் தீட்டும்
அட்டவணை என்பதனை அறிக தீமை
        அணுகாத நிகழ்ச்சிகளே இன்பம் என்க.

–(13–4–1968–ல் சென்னை வானொலியில்
‘இன்னா செய்யாமை’ என்ற தலைப்பில்
பாடிய கவிதை)




துன்பங்கள் சுருக்கென்று தைப்ப தாலே,
துன்பத்தை ஊசியுடன் ஒப்பிட் டார்கள்.
‘இன்’ என்றால் இன்பத்தைக் குறிக்கும்; அந்த
இன்பந்தான் உலகத்தை ஒன்று சேர்க்கும்.

–(13–4–1968–ல் சென்னை வானொலியில்
‘இன்னா செய்யாமை’ என்ற தலைப்பில்
பாடிய கவிதை)