உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சுரதா கவிதைகள்


முதலிரவு

முகமும் முகமும் முத்தமும் முத்தமும்
சுகமும் சுகமும் தோன்றுதற் குறிய
அரிச்சுவடி இரவே ஆனந்த இரவாம்!
ஆண்பெண் இருவர்க்கும் அதுமுத லிரவாம்!


மௌனம்

அறிவிலா மூடரின் அறியா மைக்கு,
மௌனமே சிறந்த மேலாடை ஆகும்!


பாரிதான் மனித மேகம்
       பறவைதான் உயிர்வி மானம்;
மாரிதான் முகிலின் வேர்வை;
       மௌனந்தான் உதட்டின் போர்வை.

–நூல் : துறைமுகம்


முத்தம்

முத்தமோ உதட்டுச் சண்டை!
முறையாக நடத்து கின்ற
ஒத்திகை! சூடில் லாத
ஒற்றடம்!.............