உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

81


நண்பரின் துணையோ நீடிப்ப தில்லை
மனைவியின் துணைதான் மரணம் வரையிலும்
நீண்ட படியே இருக்கும் நெடுந்துணை.


வெட்டுண்ட பாக்கைப் போல
        விலகாமல், வகுத்த வாழ்வில்
கட்டுண்டு கடமை செய்யும்
        காரிகை மனைவி யாவாள்.

கட்டில்

அரசு கட்டில் அந்நாளில் இருந்தது.
முரசு கட்டில் முன்னாளில் இருந்தது.
கோனாட்சி மாறிக் குடியாட்சி வந்ததால்
இருவகைக் கட்டிலும் இந்நாளில் இல்லை!


மங்கை யானபின் மாப்பிள்ளை தேவை
கல்யாண மானபின் கட்டில் தேவை


ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
ஆறடி நிலமே சொந்தமடா!
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா! – கண்
மூடினால் காலில்லாக் கட்டிலடா!

–‘நீர்க்குமிழி’ படப்பாடல்