பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களைப் படித்துத்தான் "சுரதா பரம்பரை" என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிற அளவுக்கு பெருமளவில் கவிதை ரசிகர்கள் இவருக்கு உருவாயினர்.

1955-ல்"காவியம்"என்கிற கவிதை வார இதழை உவமைக் கவிஞர் துவக்கினார். உலகிலேயே முதன் முதலாக கவிதையிலேயே வார இதழை நடத்தியவர் என்கிற பெருமையைப் பெற்றார். காவியத்தைத் தொடர்ந்து "இலக்கியம்" (1958) "ஊர்வலம்(1963)"விண்மீன்"(1964) என்று பல இலக்கிய ஏடுகளை துவக்கி நடத்தி வந்தார் உவமைக் கவிஞர். 1965-ல் உவமைக் கவிஞரின் புகழ்பெற்ற "தேன்.மழை" என்கிற கவிதை நூல் வெளிவந்தது. 1969-ல் இந்நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. 1968-ல் உவமைக்கவிஞர் அவர்கள் தனது பெயரிலேயே சுரதா" என்கிற கவிதை மாதமிருமுறை இதழைத் தொடங்கினார். அதன் பிறகே கவிஞர்கள். தங்கள் பெயரில் இதழைத் தொடங்கும் முறையைக் கொண்டு வந்தனர். 1971-ல் "ஆனந்தவிகடன்" வார இதழில் வாரந்தோறும் உவமைக்கவிஞர் எழுதி வந்த கவிதைகள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.