ஓராண்டுக் காலத்திற்கு மேல் வாரந்தோறும் ஆனந்தவிகடனில் உவமைக் கவிஞரின் கவிதைகள் வெளிவந்தன. விகடனில் மற்றவற்றைவிட இவரது கவிதைக்கே அதிக அளவில் கடிதங்கள் வந்து குவிந்தது சிறப்புக்குறியதாகும்.
☐பாவேந்தரைத் தொடர்ந்து 1966–ல் தமிழ்க் கவிஞர் பெருமன்றத்தின் தலைவராக இருந்து செயல்பட்டார். மீண்டும் இருபதாண்டுக் காலத்திற்குப் பிறகு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு நல்லதிட்டங்களை செயல்படுத்தினார்.
☐1972–ல் தமிழக அரசு உவமைக்கவிஞருக்கு “கலைமாமணி” பட்டம் வழங்கியது.
☐1978–ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசு முதன் முதலில் ஏற்படுத்திய “பாவேந்தர் பாரதிதாசன் விருது” (ரூ 10,000 தொகை–4 பவுன் தங்கப் பதக்கம்) உவமைக் கவிஞருக்கு வழங்கி தமிழக அரசு பெருமையடைந்தது.
☐1980–82–ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவுக்கு இருமுறை நீண்டகால சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்.
☐1982–ல் உவமைக்கவிஞரின் அறுபது வயது நிறைவையொட்டி தமிழக நிதியமைச்சர் டாக்டர் நாவலர் தலைமையில் “கவிஞர் சுரதா மணிவிழா” நடைபெற்றது. இலக்கிய அன்பர்கள்