இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞருக்கு திரட்டிய நிதி ரூ.60,000 அந்த விழாவில் உவமைக் கவிஞருக்கு வழங்கப்பட்டது. விழாக்குழுவின் சார்பில் மணிவிழா மலரும் வெளியிடப்பட்டது.
☐1982–ல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் மடத்தில் பாரி வள்ளல் விழாவின்போது “கவியரசர்” பட்டமும் தங்கப் பதக்கமும் உவமைக் கவிஞருக்கு வழங்கப்பட்டது.
☐1987–ல் மலேசியாவில் நடைபெற்ற 6–வது உலகத்தமிழ் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பங்குகொண்டு உரையாற்றினார். அப்போது “உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை” அங்கு அமைக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் உள்ள தமிழ்க் கவிஞர்கள் பலரும் கூடி அதன் தலைவராக உவமைக் கவிஞரைத் தேர்ந்தெடுத்தனர்.
☐1989–ல் அரபுநாடுகளில் ஒன்றான “சார்ஜா”வுக்கு உவமைக் கவிஞர் சுற்றுப் பயணம் செய்து அங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்.
☐பாவேந்தர் நூற்றாண்டான 1990–ல் டாக்டர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் சார்பாக முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட கலைத் துறை வித்தகருக்கான “பாரதிதாசன்