பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விருது" உவமைக் கவிஞருக்கு வழங்கப்பட்டது. 1990-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் மகாகவி குமரன் ஆசான்" அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள 'குமரன் ஆசான் விருது" உவமைக் கவிஞருக்கு வழங்கப்பட்டது.

இதுவரை 1000க்கும் மேற்பட்ட கவியரங்க
நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்று 
நடத்தியிருக்கிறார். 2000 கவிஞர்கள் இவர்
தலைமையில் பாடியிருக்கின்றார்.
உலகிலேயே முதன் முதலாக கவிதை வார
இதழ் தொடங்கி நடத்தியவர். இதழின் பெயர் 
"காவியம்",
வீட்டுக்கு விடு கவியரங்கம், முழுநிலாக்
கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக்
கவியரங்கம் விமானக் கவியரங்கம், கப்பல் 
கவியரங்கம் என்று கவியரங்க நிகழ்ச்சிகளை
பல்வேறு நிலைகளில் நடத்தி புதுமையும்,
புரட்சியும் செய்து வருகிறார். 

ஒவ்வொருவரும் தமது இல்லத்தில் தனது 
கருத்துக்களை அல்லது தாம் விரும்பும் 
மற்றவருடைய கருத்துக்களை கல்வெட்டாக 
அமைத்துக் கொள்ள வேண்டும் என்று 
வலியுறுத்தி, அதனைத் தொடர்ந்து செய்து
வருகிறார்கள்.

வீட்டுக்கு விடு திருவள்ளுவர், பார்திதாசன்