பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா கவிதைகள்

துன்பம்

வாயை விட்டு வெளிவரும் வார்த்தையை மறுபடி விழுங்கவா முடியும் ஓர் ஆயிரம் தடவை அழுது புலம்பினும் அதனால் துயரமா குறையும்.

தென்' என்றால் தென்திசையைக் குறிக்கும்;

மேலும் தென்னையெனும் மரத்தினையும் சுட்டிக் காட்டும்.

துன்’ என்றால் துணிதைக்கும் ஊசி யாகும்

துன்பமெலாம் ஊசிமுனை போலே குத்தும்.

(13-1968-ல் சென்னை வானொலியில்

- இன்னா செய்யாமை என்ற தலைப்பில் பாடிய கவிதை)

உருண்டோடிக் கொண்டிருக்கும் கூழாங் கல்லில்

ஒருபோதும் பாசிவந்து படிவ தில்லை.

வரவுக்குத் தக்கபடி செலவு செய்து

வருவோரைத் துன்பங்கள் தொடுவ தில்லை.

திண்டாட வைப்பதுவும் துன்பம்; நம்மைத்

தெருவோரம் நிறுத்துவதும் துன்ப மாகும்.

கண்ணிரும் தண்ணிரும் ஒன்றா னாலும்

கண்ணிரே, துன்பத்தில் ஊஞ்ச லாகும்.