உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

107



கருத்துக்கள்

திறமை முதலில் பிறந்தால்தான் புகழ்
பிறகு பிறக்கும்.

–சுரதா

மீனைப்போல் வளையவும், நெளியவும்
தெரியாத மனிதன் வாழ்வே முடிவதில்லை.

–சுரதா

வாழ்க்கைக்குக் காதல்தான் துறைமுகம்.

–சுரதா

வாழ்க்கை என்பது தூக்கம் என்றால்
காதல் என்பது கனவு.

–சுரதா

எதையாவது பெறவேண்டும் என்று
துடிப்பது ஆசை. எதையாவது தரவேண்டும்
என்று எண்ணுவது தியாகம்.

–சுரதா

சுவர்மீதில் ஒட்டிக்கொண்டிருக்கும் வெள்ளைச்
சுண்ணாம்புப் போன்றதுதான் பதவியாகும்.

–சுரதா